இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹவாக்கிங் காலமானார்

உலகச் செய்திகள் செய்திகள்

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹவாக்கிங்; தனது 76 வயதில் காலமாகியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் 08.01.1942இல் பிறந்த ஸ்டீஃபன் ஹவாக்கிங்;, கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக இருந்து வந்தார். அத்துடன், காலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம்” உள்ளிட்ட முக்கிய அறிவியல் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார்.

ஸ்டீஃபன் ஹவாக்கிங்; அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் என்னும் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டார். இக்குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணனியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு காட்டி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.