மரை இறைச்சியுடன் ஒருவர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

திருகோணமலை அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 கிலோ மரை இறைச்சியை வைத்திருந்த ஒருவரை நேற்று மாலையில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கந்தளாய், தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த சந்தேக நபர் மரை இறைச்சி விற்பனை செய்து வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 10 கிலோ மரை இறைச்சியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இன்று கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.