நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மஹிந்த அணியின் விளக்கம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை காலதாமதமாகின்றமை குறித்து மஹிந்த அணி விளக்கமளித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியினர், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு தர முன்னர் இணக்கம் வெளியிட்ட போதிலும், இதிலிருந்து தற்சமயம் பின்வாங்குவதாக பொதுஜன முன்னனியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இதனை அவர் தெரிவித்ததுடன், எவ்வாறாயினும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியளிக்க வேண்டும் என்பதற்காக அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் சற்று காலதாமதம் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.