கேரள கஞ்சாவுடன் நபர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுனாமி வீடமைப்பு திட்டம் சாந்தி நகர் சூரங்கல் – 5 பிரதேசத்தில் ஒரு கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

32 வயதுடைய முகம்மட் நியாஸ் என்பவர் விற்பனைக்காக தமது வீட்டில் பதுக்கி வைத்திருந்த வேளையிலேயே இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.