ஐந்தாவது போட்டியில் இந்தியா வெற்றி

விளையாட்டு

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற ஐந்தாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற குறித்த போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்தமைக்கு அமைவாக, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 03 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றது.

177 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.