கைதுசெய்த சமூக வலைத்தளங்களை விடுதலை செய்யுங்கள் – ஜே.வி.பி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தகவலறியும் மற்றும் அபிப்பிராயங்களை வெளியிடும் உரிமை ஆகியனவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்துள்ளதாக ஜே.வி.பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், கைதுசெய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களை விடுதலை செய்யுமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சருக்கு, அவர் நேற்று அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கண்டிப் பிரதேசத்தை மையப்படுத்தி கடந்த வாரங்களில் ஆரம்பிக்கப்பட்ட இனவாதம் மற்றும் மதவாதப் பிரச்சினைகள் பரவிச் செல்வதற்கு சமூக வலைத்தளங்களே காரணமெனத் தெரிவித்த அரசாங்கம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்குத் தற்காலிகத் தடையை விதித்த போதிலும், குறித்த தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை தீர்மானம் எடுக்காமையால், குறித்த சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தடை மூலம் அரசாங்கம் தகவலிறியும் உரிமை, அபிப்பிராயங்களை வெளியிடும் உரிமை என்பனவற்றைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எது எவ்வாறிருப்பினும், இனவாதத்தை அல்லது மதவாதத்தைத் தூண்டும் வெறுப்பு பேச்சுக்களுக்கு இடம் வழங்காது, அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதற்கான சட்டத்தை உச்ச ரீதியில் பயன்படுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Trending Posts