ஜனாதிபதி செயலாளர் – பேஸ்புக் நிறுவனப் பிரதிநிதிகள் சந்திப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

பேஸ்புக் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருவதாகவும், இதன்போது பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள தடையை தளர்த்துவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ள அதேவேளை, உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளை முன்னெடுப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதத்தை அடிப்படையாகக் கொண்டு, கடந்த 7ஆம் திகதி முதல் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழ்நிலையை கருத்திற் கொண்டு வட்ஸ்அப் மற்றும் வைபர் தளங்களுக்கான தடை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.