உர மூடைகளுக்கு மானிய விலை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சிறுபோக பருவத்தின் போது, நெற் பயிர் செய்கைக்கு தேவையான உரம் மூடை ஒன்றை 500 ரூபாவிற்கு மானிய விலையில் வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதவிர, ஏனைய விவசாயங்களுக்கான உர மூடை ஒன்றை 1500 ரூபாய் என்ற மானிய விலையில் வழங்கவும் தீர்மானித்துள்ளதாகவும், விவசாயிகளிடமிருந்து கிடைக்கபெற்ற கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.