காற்றின் வேகம் அதிகரிப்பு – கடற்தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நாட்டில் மேற்கு பகுதியில் இருந்து 850 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக தொடர்ந்தும் புத்தளம் முதல் கொழும்பு – காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடுமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த பகுதிகளில் மணிக்கு 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று அதிகரித்து வீசக்கூடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Trending Posts