தொடர்கிறது பணிப்புறக்கணிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள்

பணிக்கு திரும்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ள போதிலும், தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தை மேற்கொள்வதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று 16ஆவது நாளாகவும் தமது போராட்டம் இடம்பெறுவதாக அதன் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளதுடன், தொழிற்சங்க கூட்டமைப்பின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்காக, தற்போது புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊழியர்களும் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேற்று மாலை அறிவித்திருந்ததாகவும், குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதிலும் பணிக்கு திரும்ப போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •