விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தவர்களுக்கான தீர்ப்புத் திகதி அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்ததாக சுவிட்சர்லாந்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 13 பேர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கு விசாரணைகளை சுவிட்சர்லாந்தின் பெலின்சோனா பிராந்திய குற்றவியல் நீதிமன்றில் இடம்பெற்றுவந்த நிலையில், இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜுன் மாதம் 14ஆம் திகதி அறிவிக்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுவதாக, அந்நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த எட்டு வாரங்களாக இந்த வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், இதற்காக 04 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.