இணைய கொடுக்கல் வாங்கல்களுக்கு புதிய சட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

இணையத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்களுக்காக புதிய சட்ட கட்டமைப்பு முறை ஒன்றை அறிமுகப்படுத்த நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈ-வர்த்தகம் தொடர்பாக இலங்கையில் தற்போது அமுல்ப்படுத்தப்படும் சட்டமுறை பலவீனமானது என்பதுடன், அது தொடர்பாக சரியாக செயற்படக் கூடிய ஒழுங்குமுறை கட்டமைப்பொன்று இல்லாமை பிரச்சினைக்குரியது என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக சர்வதேச வர்த்தக மத்திய நிலையத்துடன் இணைந்து ஈ-வர்த்தகம் குறித்த புதிய சட்ட கட்டமைப்பு முறை ஒன்றை வகுப்பதற்கு நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

அரச நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றின் பங்களிப்புடன் இன்றும் நாளையும் கொழும்பில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும், தற்போது நாட்டின் சனத்தொகையில் 33 வீதமானோர் இணையப் பயன்பாட்டாளர்கள் என்பதுடன், 25 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டோர் அதில் அதிகமானவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.