காலியில் மேதினக் கூட்டத்திற்குத் தயாராகும் கூட்டு எதிரணி

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஒன்றிணைந்த எதிரணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, இம்முறை காலி நகரில் மேதின பேரணியை நடத்தவுள்ளதாக நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கான குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக, இந்தக் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே நியமிக்கப்பட்டுள்ளதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன, ரமேஸ் பத்திரன மற்றும் செஹான் சேமசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Trending Posts