கல்வி அமைச்சு முன்னிலையில்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைய, தகவல்களைப் பெற்றுக்கொடுப்பதில் கல்வி அமைச்சு முன்னிலையில் திகழ்கின்றது.

அதிகமான தகவல்களைக் கோரிய விண்ணப்பங்கள் கல்வி அமைச்சுக்கே கிடைத்துள்ளதுடன், இதில் 35 சதவீதமான தகவல்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், அரச நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு 30 சதவீதமான தகவல்களைப் பெற்றுக்கொடுத்து இரண்டாமிடத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தகவல் அறியும் உரிமை சட்டமானது, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.