முகப்புத்தகத்தின் மீதான தடை நீக்கம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

முகப்புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்குமாறு ஜனாதிபதி, தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

கண்டியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து, இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான கருத்துக்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் நோக்கில் கடந்த தினங்களில் முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.