இராஜதந்திரிகளை அழைக்க ரஷ்யா நடவடிக்கை

உலகச் செய்திகள்

பிரித்தானியாவிலுள்ள தமது 23 இராஜதந்திரிகளையும் மிக விரைவாக ரஷ்யாவிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற பிரித்தானிய பிரதமர் தெரேசா மே நேற்று தீர்மானம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.