நீரிழிவு பரிசோதனை உபகரண விலையில் கட்டுப்பாடு?

செய்திகள் முக்கிய செய்திகள் 2

நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் காணப்படும் சீனியின் அளவை பரிசோதனை செய்வதற்காக பயன்படுத்தும் உபகரணங்கள் பலவற்றின் விலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த உபகரணங்கள் பல மாறுபட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவது கண்காணிப்பு மூலம் தெரிய வந்துள்ளதால் இந்நடவடிக்கை எடுப்பதாகவும், இதற்கு அமைவாக, நீரிழிவு நோயாளர்களின் இரத்தத்தில் காணப்படும் சீனியின் அளவை பரீட்சிக்கும் குளுக்கோஸ் பெல்ட்கள் மற்றும் சாதனங்களின் விலைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளன.

குளுக்கோஸ் பெல்ட்கள் 25 அடங்கிய பக்கெட் ஒன்று 1,500 ரூபாவிலிருந்து அதிக விலைக்கு சந்தையில் விற்கப்படுவதுடன், இரத்தத்தில் காணப்படும் சீனியின் அளவை பரீட்சிக்கும் சாதனம் ஒன்று 2,500 ரூபாவிலிருந்து மாறுபட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் கட்டணங்களை கட்டுப்படுத்திய பின்னர் புற்றுநோயாளர்கள் பயன்படுத்தும் மருந்து வகைகளின் விலைகள் கட்டுப்படுத்தப்படவுள்ளதுடன், அதன்பின்னர் நீரிழிவு நோயாளர்கள் பயன்படுத்தும் உபகரணங்களின் விலைகளைக் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.