வேலையற்ற பட்டதாரிகளின் எச்சரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வேலையற்றப் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை விரைவில் வழங்காவிட்டால் மீண்டும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை முன்னெடுப்பதாக ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி அவர்கள் நேற்று தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, எதிர்வரும் 30 தினங்களுக்குள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகத் தெர்வு இடம்பெறவுள்ளதாக அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இவ்வாறு வழங்கப்பட்ட உறுதிமொழியை அதிகாரிகள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில், மீண்டும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை முன்னெடுக்கவுள்ளதாக ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னே ஞானானந்த தேரர் தெரிவித்துள்ளார்.