த.தே.கூவிற்கு ஆதரவில்லை – தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிப்பு

சிறப்புச் செய்திகள் செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு தமது கூட்டணி ஆதரவளிக்காதென தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுசெயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியானது, 5 அமைப்புளுடன் இணைந்து தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிட்டிருந்த அதேநேரம் வடக்கு கிழக்கில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் தனித்து ஆட்சி அமைக்க முடியாத இடங்களில் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிய முடிகிறது.

இந்நிலையில் குறித்த மன்றங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தாங்கள் ஆதரவளிப்பதில்லை என்றும், அவ்வாறு ஆதரவளிக்க முனையும் தமது கூட்டணியின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வீ.ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •