மட்டக்களப்பில் டெங்கு அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் சனத்தொகையின் அடிப்படையில் டெங்கு நோயாளர்கள் அதிகமுள்ள முதலாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தில் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நேற்று மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு 1260 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு அதிகளவில் காணப்படுவதுடன், அம்மை நோய் மற்றும் தொழுநோய் என்பன அண்மைக்காலமாக அதிகரித்துச்செல்லும் நிலையுள்ளதாகவும், நோய்களை அடையாளம் காண்போரின் எண்ணிக்கை அதிகரித்துச்செல்லும் நிலை காணப்படுவதாகவும், அவற்றிக்கான தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •