சிங்கள, தமிழ், முஸ்லிம் பாடசாலைகள் இல்லாமல் செய்யப்பட வேண்டும்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளை இல்லாமல் செய்ய வேண்டுமென அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மல்வத்து மஹநாயக தேரரை நேற்று சந்தித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளதுடன், ஆரம்பகாலங்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்படாமல் இருந்ததால் நாட்டிலுள்ள மக்களுக்கு இடையில் ஒற்றுமை காணப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

தீவிரவாத அமைப்புகள் உலகில் உள்ள முஸ்லிம்களின் மனதில் பயங்கரவாதத்தை விதைத்து முஸ்லிம்களின் மனதை சிதைக்க முயன்ற போதிலும், எமது நாட்டிற்குள் அவ்வாறன செயற்பாடுகளை மேற்கொள்ள இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் ஒருபோதும் வழிவிடப்போவதில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •