இலங்கை தொடர்பில் விஷேட அறிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹ{சைன், இலங்கை தொடர்பான விஷேட அறிவிப்பு ஒன்றை இன்று விடுக்கவுள்ளதாக மனித உரிமைகள் பேரவையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

37ஆவது மனித உரிமைகள் பேரவைக்கூட்டத் தொடர் ஜெனீவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்றையதினம் இலங்கை தொடர்பான காலக்கிரம மீளாய்வு அறிக்கை குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.

இந்த விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றவுள்ள மனித உரிமைகளுக்கான ஆணையாளர், இலங்கையில் அண்மையில் நடைபெற்ற வன்முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விஷேட அறிவிப்பை வெளியிடுவார் எனவும், இன்றைய தினம் நடைபெறவுள்ள விவாதத்தில், 2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனீவா தீர்மானம் மற்றும் கடந்த காலக்கிரம மீளாய்வு மாநாட்டின் அறிக்கை என்பவற்றில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அமுலாக்குமாறு வலியுறுத்தப்படலாம் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் இலங்கை சார்பில் ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி கலந்து கொண்டு, காணாமல் போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டமை, பலவந்தமாக காணாமல் போதல்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும் சர்வதேச சாசன சட்டம் உள்ளீர்க்கப்பட்டமை போன்ற விடயங்களை, முன்னேற்றகரமான செயற்பாடுகளென சுட்டிக்காட்டுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.