மத ஸ்தலங்களுக்கு முன்னுரிமையில் நஷ்டஈடு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கண்டியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது பாதிக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு நஷ்டஈட்டை வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பிரதமரின் ஆலோசனைக்கமைய இன்று முதல் கண்டி மாவட்ட செயலாளர் காரியாலத்தில், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேதங்களுக்கான நஷ்டஈடு வழங்கும் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அமைதியின்மை ஏற்பட்ட கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் பொலிசார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.