தொடர்கிறது போராட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வேதன மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு இதுவரை எந்த தரப்பும் தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

தற்காலிக தீர்வொன்றை ஏற்றுக்கொள்ள தமது சங்கம் ஒருபோதும் தயாரில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா சேவையாளர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு வழங்கியுள்ளதாக ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளதுடன், பல்கலைக்கழகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.