சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவாதவர்கள் அரசில்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த இடமளிக்காத தரப்பினர் நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணிகள், வேறு காரணங்களின் அடிப்படையில் தாமதப்படுத்தப்படக் கூடாது என்றும், தாஜுதீன் படுகொலை, மிக் விமான கொள்வனவு உள்ளிட்ட 1,700 மோசடிகள் தொடர்பில் முறைப்பாடுகள் உள்ள நிலையில், இவை தொடர்பாக உடனடியான முடிவுகள் அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.