மடுவில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு

செய்திகள்

மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்கேயன்குளம் பகுதியில் வீடொன்றுக்கு பின்புறமாகவுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும், 5 மற்றும் 7 வயதுடைய சிறுவர்களே சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த இரு சிறுவர்களும் கால்நடை ஒன்றை துரத்திச் சென்றபோது, கிணற்றில் தவறி விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.