மக்களின் ஆணையை மதிக்க வேண்டும்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

மக்களின் ஆணைக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், உறுதிமொழி வழங்கப்பட்ட பல்வேறுப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும், இதற்கான பதிலை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் மக்கள் வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமைய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.