யாழிற்கு ஜனாதிபதி வருகை (Photos)

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (19) திறந்துவைத்தார்.

யாழ். ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்துகொண்டு ஆய்வுகூடத்தினை நாடாவெட்டித் திறந்து வைத்ததுடன், பெயர்ப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.

பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 3 கோடி ரூபா நிதியில் இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டது. இத்தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த 2016ஆம் ஆண்டு நாட்டப்பட்டு, இரண்டு வருடங்களாக நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்விற்கு கர்தினால், மல்கம் ரஞ்சித் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி தர்சன ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பங்குத் தந்தையர்கள், அரச அதிகாரிகள், கன்னியாஸ்திரிகள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.