இலங்கை சுதந்திரக் கிண்ணம் இந்தியா வசம்

விளையாட்டு

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தையொட்டி நடக்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்தமைக்கு அமைவாக, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.

167 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இம்முறை சுதந்திர கிண்ணம் இந்தியா அணி வசம் என்பது குறிப்பிடத்தக்கது.