ஐ.தே.க அவதானத்துடன் செயற்பட வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க

செய்திகள் முக்கிய செய்திகள் 2

ஐ.தே.க.வின் தலைவருக்கு எதிராக கீழ்மட்டத்தில் இருந்து எழும் எதிர்ப்புக்கள் தொடர்பில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதேசத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், நாளுக்கு நாள் ஐக்கிய தேசியக் கட்சியானது மக்களை விட்டு தூரமாகி செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.