மருந்து மூலிகைச் செய்கைக்குத் திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

தேசிய மருந்து தயாரிப்புக்குத் தேவையான மருந்து மூலிகைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டமொன்று ஆரம்பிக்கப்படுமென்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் வங்கி வீதியில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தின் வடமத்திய மாகாண பிரதேச அலுவலகமும், விற்பனை நிலையமும் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், ஆயுர்வேதத் திணைக்களத்திற்கு உட்பட்ட மூலிகைகளும் உற்பத்தி செய்யப்படவுள்ளதாகவும், மூலிகைக் கன்றுகளின் உற்பத்திக்காக அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.