பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

அனைத்துப் பிரஜைகளதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படுமென சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அறிவித்துள்ளது.

எந்தவொரு தரப்பினரோ அல்லது நபர்களோ, மற்றுமொரு தரப்பினரையோ அல்லது நபர்களையோ இலக்குவைத்து, தொல்லை மற்றும் தொந்தரவுகளை ஏற்படுத்துவார்களாயின், அது தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கைப் பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டுமென அறிவித்துள்ளது.

இவ்விடயங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் பின்னர், நடைமுறையிலுள்ள சட்ட வரையறைக்குள் எடுக்கக்கூடிய உயர்ந்தபட்ச நடவடிக்கைளை எடுக்க, சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு முயற்சிகளை மேற்கொள்ளுமென அமைச்சின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய தொந்தரவுகள், சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு இலக்காகிக் காணாமற்போனோரது குடும்ப உறுப்பினர்கள் தொடர்பிலும் இந்த அமைச்சு அவதானம் செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.