எமது வெற்றி அரசாங்கத்தை அதிர வைத்துள்ளது – முன்னாள் ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியால் அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சில மாவட்டங்களின் பொதுஜன பெரமுன வேட்பாளர்கள் பதவியேற்கும் நிகழ்வு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிலையில், நிகழ்வில் உரையாற்றும் போNது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், அரசாங்கம் நிலைகுலைந்து போயுள்ளமை இன்று தெளிவாகியுள்ளதாகவும், இந்த நிலையற்ற தன்மை காரணமாக நாட்டினுள் வேறு எதிர்பார்பார்ப்புகள் உருவாகிக் கொண்டிருப்பதாகவும், தற்போது இருப்பது தமக்கு எதிரான அரசாங்கம் என்றும், அதனால் தமது அனைத்து செயற்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.