காச நோயாளர்களுக்கான எச்சரிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

காச நோய் இருப்பது இனங்காணப்பட்டு அதற்கு உரிய சிகிச்சைப் பெறாது உள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இவ்வாறு சிகிச்சைப் பெறாதிருப்பின் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுமென சுவாச நோய் நிபுணர் வைத்தியர் பிரசன்ன மெதகெதர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 24ஆம் திகதி உலக காசநோய் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், காச நோயாளர்களுக்கு தலா 3,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படுவதுடன், இதனை 5,000 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கடந்த 2017ஆம் ஆண்டு நாட்டில் 8,511 காசநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

காசநோயாளர்களுள் அதிகமானோர் மேல்மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ள நிலையில், 3,601 பேர் மேல் மாகாணத்தில் காச நோய் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், இது மொத்தத்தில் 42 சதவீதம் எனவும் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்படுவதாகவும், ஆரம்பத்திலேயே குறித்த நோயை இனங்கண்டு சிகிச்சை பெற்றுக்கொண்டால் இதனை முற்றாக குணப்படுத்த முடியும் எனவும் சுகாதார ஊக்குவிப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.