இராணுவத்திற்கு காணி வழங்க முடியாது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை நிரந்தரமாக இராணுவம் கையகப்படுத்த முயல்வதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த காணியை இராணுவத்துக்கு வழங்க முடியாதென பலரும் எதிர்ப்புக்களைத் தெரிவித்துள்ளனர்.

அளம்பில் மாவீரர் துயிலுமில்லம் அமைந்திருந்த காணியில் ஒரு பகுதியை இராணுவத்தினருக்கு சுவீகரிப்பதுக்கான அறிவித்தல் கிராம அலுவலர் ஊடாக ஒட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதைத் தொடர்ந்து, குறித்த காணியை சுவீகரிப்பதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரை மிக அதிகமாக குவித்து வைத்துக்கொண்டிருக்கும் அரசாங்கம், தொடர்ந்தும் மக்களின் நெஞ்சங்களில் ஏறி மிதிக்கும் செயலாக தாங்கள் இதனைப் பார்ப்பதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளதுடன், மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள காணிகளை விட்டு படையினர் வெளியேற வேண்டும் என்பதுடன், சுவீகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.