இலங்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹ_சைன் சமர்ப்பித்து இன்று உரையாற்றவுள்ளார்.

இந்த அமர்வில் கலந்து கொள்வதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி குழுவொன்று ஜெனீவா சென்றுள்ளது. குறித்த குழுவில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, விஷேட திட்டங்கள் அமைச்சர் சரத் அமுனுகம மற்றும் உள்ளூராட்சி மன்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன், வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பிலான ஒருங்கிணைப்பு செயலகம் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி காரியலய அதிகாரிகளும் இந்த குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.