கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

தமது கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று 22ஆவது நாளாக தொடர்கின்றது.

தமது பிரச்சினை தொடர்பில் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் உறுதியளித்ததை போன்று சாதகமான பதில் இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

மாதாந்த நிலுவை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி 15,000 இற்கும் மேற்பட்ட கல்வி சாரா ஊழியர்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுவரும் நிலையில், கொழும்பு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள பல்கலைக்கழங்களின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதேவேளை, நில அளவை திணைக்கள அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு ஏழாவது நாளாக தொடர்கின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Trending Posts