பொலிசார் மீது துப்பாக்கிச் சூடு – கதிர்காமத்தில் சம்பவம்

செய்திகள்

கதிர்காமம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை 6.50 மணியளவில் கதிர்காமம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், பொலிஸ் புலனாய்வு தங்காளை பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.