அரசியல் ஸ்திரமற்ற தன்மை பொருளாதார வளர்ச்சிக்குத் தடை

செய்திகள் முக்கிய செய்திகள் 2

எதிர்பார்த்த பொருளாதார இலக்கையடைந்து கொள்வதற்கு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவது அத்தியவசியமான காரணியென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

தேசிய நிதி மூலோபாய வழியை உருவாக்கும் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரசியல் ஸ்திரத்தன்மையின்றி எதிர்பார்க்கும் முன்னேற்றத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது என்றும், ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி வேகம் திருப்திப்படும் வகையில் இல்லை என்றும், புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி நோக்கினால் நாம் விரும்பும் மட்டத்திற்கு முன்னேற்றம் இல்லை என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.