போதை மாத்திரைகளுடன் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

600 டெமடோல் மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் கற்பிட்டி, ஏத்தாலே பிரதேசத்தில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 32 வயதுடைய வேட்பாளர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேக நபர், கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதுடன், நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.