ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் செயற்பாட்டில் தெளிவில்லை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அரசியல் ரீதியாக எதிர்க்கத் துணிச்சல் இல்லாதவர்கள், விஷேட நீதிமன்ற சட்டமூலத்தை நிறைவேற்றி அதனூடாக அவரின் பிரஜா உரிமையைப் பறிக்க முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொரளை, என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு எவ்வாறான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்பதில் தெளிவில்லாமல் இருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில், முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவை எதிர்த்து தேர்தலில் வெற்றிப்பெற முடியாது என்பதை உணர்ந்திருந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை அமைத்து, அவருக்கெதிராக விசாரணைகளை மேற்கொண்டு, அவரின் பிராஜா உரிமையைப் பறிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

நாட்டை ஊழலற்றதாக்குவதற்கும், ஊழல்வாதிகளைத் தண்டிப்பதற்காகவும் விஷேட நீதிமன்றம் அமைப்பதாகக் கூறப்பட்டாலும், இது திருடர்களை தண்டிப்பதற்கானதல்ல என்றும், மாறாக மக்களின் அபிமானத்தை வென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், அவரது குடும்பத்தினரையும் சிறையில் அடைப்பாதற்கான முயற்சியே இது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Trending Posts