இலகு கடன் திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை மீள கட்டியெழுப்பும் வகையில் இலகுகடன் திட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்ப்படுத்தவுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளதுடன், அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து இதற்கான யோசனையை அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல முன்வைத்திருந்தநிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதன் பிரகாரம், பாதிக்கப்பட்ட வியாபாரங்களை மீளக்கட்டியெழுப்புவதற்காக, 2 சதவீத குறைந்த வட்டி வீதத்தின்படி கடனைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி வன்முறைகளின் போது பொலிசார் முறையாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து, இந்த செய்தியாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகரவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, அந்த குற்றச்சாட்டை அவர் மறுதலித்த அதேவேளை, வன்முறைகளின் போது முஸ்லிம் பள்ளிகளுக்கு தீ வைக்க சிலர் முயற்சித்துக் கொண்டிருந்த வேளையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளதால், பொலிசார் இந்த விடயத்தில் உரிய வகையில் செயற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.