மியன்மார் ஜனாதிபதி இராஜினாமா

உலகச் செய்திகள்

மியன்மார் ஜனாதிபதி ஹிட்டின் க்யூ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்த கடிதத்தை அவர் ஒப்படைத்துள்ளதாக மியன்மார் ஜனாதிபதி செயலகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ள நிலையில், அவரின் இந்த பதவி விலகளுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்ற போதிலும், 71 வயதான மியன்மார் ஜனாதிபதி உடல் நிலையை கருத்தில் கொண்டு அந்த பதவியில் இருந்து விலகியிருக்கலாமென வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.