மண்ணெண்ணெயில் கலப்படம் செய்தால் அனுமதிப் பத்திரம் இரத்து

செய்திகள் முக்கிய செய்திகள் 1

ஜனாதிபதியின் ஆலோசனையின் கீழ் மண்ணெண்ணெய் கலப்படம் மேற்கொள்ளும் எரிபொருள் நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படுமென பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன், மண்ணெண்ணெய் கலப்படத்தை நிறுத்தும் நோக்கில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதாகவும், நாடு மற்றும் அரசு என்ற ரீதியிலேயே நஷ்டத்தின் மத்தியில் மண்ணெண்ணெய்யை விநியோகிப்பதாகவும், தாம் நடத்திய ஆய்வில் சில எரிபொருள் நிலையங்களில் டீசல் மற்றும் பெற்றோலில் மண்ணெண்ணைய் கலப்படம் செய்யப்படுவதுடன், வழிநடுவில் பவுசர்களில் மண்ணெண்ணைய் கலப்படம் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறப்பு குழுவினால் மண்ணெண்ணெய் கலப்படத்திற்கு காரணமான பலரை கண்டுபிடித்துள்ள போதிலும், சட்டத்தில் உள்ள சில குறைபாடுகள் காரணமாகவே சில சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், எதிர்காலத்தில் கடுமையான தீமானத்தை மேற்கொள்ளவேண்டிய நிலையுள்ளதனால், மண்ணெண்ணெய் கலப்படத்தை நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாகவும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Trending Posts