காணாமற் போனவர்களை வைத்து பணம் சம்பாதிப்பதாகக் குற்றச்சாட்டு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வடக்குக் கிழக்கு மாகாணத்தில் காணாமற்போன உறவுகளை வைத்து சில அரச சார்பற்ற நிறுவனங்கள் தென்னிலங்கையில் பணம் சம்பாதிக்கின்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.