மக்களைப் பிணைக் கைதிகளாக்கியவர் சுட்டுக் கொலை

உலகச் செய்திகள்

தென் பிரான்ஸ் நகரான ரிபெஸ் நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் பொது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்திருந்த ஒருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுத குழுவை சேர்ந்தவரென நம்பப்படும் மொரக்கோ நாட்டைச் சேர்ந்த இவர் சிறையடைக்கப்பட்டுள்ள சலா அப்டீஸ்லம் என்ற தீவிரவாதியினை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளதாகவும், முன்னர் இரண்டு பொது மக்களைச் சுட்டுக் கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறையடைக்கப்பட்டுள்ளவர், கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற பாரிய தாக்குதலின் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.