நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு நிதியுதவி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இலங்கையில் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க நடவடிக்கைகளின் மேம்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியமும், ஜேர்மன் அரசாங்கமும் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளன.

இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, அமைச்சின் செயலாளர் வி. சிவஞானசோதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் துங் லாய் மாகு, ஜேர்மன் தூதுவர் ஜோஏர்ன் ரோட் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறித்த திட்டத்தினை முன்னெடுப்பதற்காக மொத்தமாக 14.5 மில்லியன் யூரோக்கள் வழங்கப்படுமென அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.