மக்களை அரசு ஏமாற்றுகிறது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகளின் காரணமாக சொத்துக்களை இழந்தவர்கள், இன்று துன்ப நிலைக்குள்ளாகியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னாள் ஜனாதிபதியைச் சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த காலத்தில் நஷ்டஈடு வழங்கப்பட்ட போதிலும், அந்த மதிப்பீட்டு முறைமை மாற்றி, குறைந்த மதிப்பீட்டுடன் நஷ்டஈடு வழங்கப்பட்டதால், மக்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், இது குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.