பெற்றோலுக்கான விலை அதிகரிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நேற்று (23) நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 09 ரூபாவாலும் டீசல் ஒரு லீற்றர் 05 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டதாகவும், சுப்பர் டீசல் மற்றும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை என்றும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய விலைகளின் பிரகாரம், 92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றர் 126 ரூபாவிற்கும் டீசல் ஒரு லீற்றர் 100 ரூபாவிற்கும் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Posts