சாவகச்சேரியில் இளைஞன் மீது கத்திக்குத்து

செய்திகள் முக்கிய செய்திகள் 2

சாவகச்சேரி பஸ் நிலையத்தில் நின்ற இளைஞன் மீது நேற்று கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் வடமராட்சியைச் சேர்ந்த சிறீரங்கநாதன் மயூரன் (வயது 25) என்ற இளைஞனே படுகாயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் சாவகச்சேரி நீதிமன்றத்திலுள்ள வழக்கொன்றுக்காக சென்று விட்டு பஸ் நிலையத்தில் நின்ற போதே கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ள அதேவேளை, குறித்த இளைஞரை கத்தியால் குத்திய வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Trending Posts